ஐபிஎல் இன் புதிய விதிமுறை | ஐபிஎல் 2023 New ரூல்ஸ்

ஐபிஎல் 2023 இன் புதிய விதிமுறை | இம்பாக்ட் பிளேயர் Rule

இம்பாக்ட் பிளேயர்- ஐபிஎல் ஏலம் தொடங்கவுள்ள நிலையில் பிசிசிஐ குழு சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள், அணிகளுக்கு வாரமா அல்லது சாபமா என்று பார்ப்போம்.

ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகப்போகும் புதிய ரூல்ஸ்!

ஐபிஎல் 2023 சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் போட்டியைச் சுவாரஸ்யமாக மாற்ற பிசிசிஐ எப்போதும் புதிய முயற்சிகளைச் செய்து கொண்டு வருகிறது. புதிய அணிகள், புதிய வீரர்கள் மற்றும் பல தனித்துவமான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்கள் பார்வையாளர்களை எப்போதும் அவர்களிடம் வைத்துள்ளனர். இம்முறை “இம்பாக்ட் பிளேயர்” விதியை அறிமுகப்படுத்த உள்ளது. ஐபிஎல் போட்டியில் இது ஒரு மாற்றம் தரும் முயற்சியாகும்.

பார்வையாளர்கள் மட்டுமல்ல, குழு உறுப்பினர்களும் புதிய விதிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளனர். போட்டியில் தோல்வியடையும் நேரத்தில் புதிய விதி உதவியாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு அணியிலும் போட்டியை வெற்றியுடன் முடிக்கச் சில திறமையான வீரர்கள் இருப்பார்கள், ஆனால் அவர்களை அணியில் தக்க சமயத்தில் பயன்படுத்த முடியாத நிலை இருக்கும். திறமையான வீரர் ஆட்டம் வரும்வரை பொறுத்து இருக்க வேண்டும் அல்லது சில சமயம் ஆட்டம் முடிந்து கூட விடும், அதனால் போட்டி தோல்வியில் முடியும். இப்பிரச்னையை போக்கவும், போட்டியைச் சுவாரஸ்யமாக மாற்றவும், இந்தப் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் விதி சரியாக எதைப் பற்றியது? இந்த விதியின் விவரங்கள் என்ன? ஒரு அணியில் 12 வீரர்கள் இருக்கலாம் என்று அர்த்தமா? ஐபிஎல் 2023 காக பிசிசிஐ அறிமுகப்படுத்திய சமீபத்திய “இம்பாக்ட் பிளேயர்” விதியின் அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

இம்பாக்ட் பிளேயர் என்றால் என்ன?

இம்பாக்ட் ப்ளேயர் என்பது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர். ஒரு பிளேயரைப் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது அல்லது விளையாடும் பிளேயிங் பீல்டிலுருந்து வெளியே அனுப்பிவிட்டு, இம்பாக்ட் வீரரைக் களத்தில் விளையாட வைக்கலாம். இந்த விதிமுறையைப் பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு அணிகளும் முதலில் தங்களது 11 பேர் கொண்ட அணியைச் சமர்ப்பிக்க வேண்டும் பின்பு இம்பாக்ட் வீரராக ஐபிஎல் போட்டியில் பயன்படுத்த விருப்பமுள்ள 4 substitute வீரர்களின் பெயர்களை முன்கூட்டியே சொல்ல வேண்டும்.

பின்பு, இந்த விதிமுறையைப் பயன்படுத்த நினைத்தால் ஒரு இன்னிங்ஸின் 14 வது ஓவருக்கு முன்பாகப் பயன்படுத்த வேண்டும். இதைக் களத்தில் இருக்கும் நடுவரிடத்தில் தெரிவித்து விட்டு இரு அணிகளும் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் மாற்றப்பட்டு வெளியே வந்த வீரர் மேற்கொண்டு அந்தப் போட்டியில் எந்தச் சூழலிலும் பங்கேற்க முடியாது. ஒருவேளை மழை பெய்து போட்டி 10 ஓவர்களாகக் குறைக்கப்படும் என்றால் இந்த விதிமுறையை யாரும் பயன்படுத்த முடியாது. 20 ஓவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இம்பாக்ட் பிளேயர் rule

இம்பாக்ட் பிளேயர் ஒரு இந்தியராக இருக்க வேண்டும், ஒரு அணியின் தொடக்கதில் 11ல் நான்குக்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் இருந்தால் மட்டும் ஒரு இந்திய வீரர் இம்பாக்ட் பிளேயர் ஆக இருக்க முடியும்.

IPL 2023 ல் இரண்டு விதிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஒன்று இம்பாக்ட் வீரர்.

மற்றொன்று மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியும் என்று BCCI கூறியுள்ளது. நடந்து முடிந்த சீசன்களில் மாற்று வீரர் பீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.

இவை இரண்டும் நடக்க போகும் முதல் சீசன் இதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஒரு அணியின் தொடக்கதில் 11 ல் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் இருந்தால், ஒரு வெளிநாட்டு வீரரை இம்பாக்ட் பிளேயர் ஆக மாற்ற முடியும் என்று லீக் நிபந்தனை விதித்துள்ளது.

இது விளையாட்டுக்கு ஒரு புதிய தந்திரத்தையும் மற்றும் சுவரசத்தையும் சேர்க்கும் என்று ஐபிஎல் நிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 23 அன்று நடக்க இருக்கும் வீரர்களின் ஏலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. பல குழு விளையாட்டுகளில் அணிகளைத் தந்திரோபாய மாற்றுகளை உருவாக்க அனுமதிக்கின்றன. அதாவது, கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால் போலவே மாற்று வீரர்கள் மற்ற வழக்கமான வீரரைப் போல் செயல்பட முடியும் அல்லது பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல இப்போது இங்கே பயன்படுத்த முடியும்.

Also, Read Virat Kohli, A Role Model For The Youth Through His Massive Achievements

ஐபிஎல் 2023ல் இம்பாக்ட் பிளேயர் எப்படி வேலை செய்யப் போகிறது?

இது மிகவும் நேரடியானது. விளையாடும் 11 வீரர்களைத் தவிர, ஒரு அணி டாஸில் நான்கு மாற்று வீரர்களைப் பட்டியலிட வேண்டும். அவர்கள் நான்கு substitute பிளேயரிலிருந்து ஏதேனும் ஒருவரை தங்கள் இம்பாக்ட் பிளேயராகப் பயன்படுத்தலாம்.

இம்பாக்ட் பிளேயரை எந்த நேரத்தில் கொண்டு வர முடியும்?

ஒரு இம்பாக்ட் வீரரை உள்ளே கொண்டுவர சில விதிகள் உள்ளன. ஒரு கேப்டன் அணியின் இம்பாக்ட் வீரரைப் பரிந்துரைக்கலாம் மற்றும் பேட்டிங் செய்யும் அணி ஒரு இன்னிங்ஸ் தொடங்கும் முன் அவர்களை அழைத்து வரலாம்; ஒரு ஓவரின் முடிவில் மற்றும் ஒரு விக்கெட் வீழ்ச்சியின்போது அல்லது ஒரு பேட்டர் ஓய்வு பெறும்போது இம்பாக்ட் வீரரை உள்ளே கொண்டு வரலாம்.

இருப்பினும், ஒரு இம்பாக்ட் பிளேயரை பந்துவீச்சு பக்கம் கொண்டு வருவது என்பது ஒரு விக்கெட் வீழ்ச்சியின்போது அல்லது ஒரு பேட்டர் ஓய்வு பெற்றால் மட்டுமே நடக்கும்.

இம்பாக்ட் பிளேயரால் மாற்றப்பட்ட வீரருக்கு என்ன நடக்கும்?

Substitute வீரர் விளையாட்டில் மேலும் பங்கேற்க முடியாது மற்றும் மாற்று பீல்டராகக் கூட இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு முறை அவர் வெளியில் சென்றுவிட்டால், அடுத்த போட்டிவரை அவர் வெளியில் தான் இருக்க வேண்டும்.

IPL 2023 இல் “இம்பாக்ட் பிளேயர்“ விதிகள்பற்றிய பிற முக்கிய குறிப்புகள்]

ஒரு வீரர் “இம்பாக்ட் பிளேயர்” மூலம் மாற்றப்பட்ட பின், மாற்றப்பட்ட வீரர் அல்லது முன்பு விளையாடியவர் மீண்டும் களத்திற்கு வர முடியாது. அவரால் மாற்று பீல்டராகக் கூட வர முடியாது. மாற்றப்பட்டதும், ஆட்டக்காரர் போட்டியிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்படுவார்.

ஒரு “இம்பாக்ட் பிளேயர்” கேப்டனாகச் செயல்பட முடியாது.

பந்துவீச்சு அணியில் “இம்பாக்ட் பிளேயர்” இருந்தால், அவர் மாற்றும் வீரர் எத்தனை ஓவர்கள் வீசினார் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு தடையில்லாத விளையாட்டில் 4 ஓவர்களின் முழு ஒதுக்கீட்டையும் வீரரால் வீச முடியும்.

  • எடுத்துக்காட்டு: பாண்டியா 2 ஓவர்கள் வீசியபிறகு பாண்டியாவிற்கு பதிலாக ரவி பிஷ்னோய் LSG க்கு வந்தால், ரவி பிஷ்னோய் தனது 4 ஓவர்களையும் வீசும் வாய்ப்பைப் பெறுகிறார்.
  • இம்பாக்ட் பிளேயர் அணியால் பயன்படுத்தப்படும்போது, காயம் ஏற்பட்டால், மாற்று வீரர் உள்ளே வந்து அவருக்குப் பதிலாக விளையாடத் தொடங்கலாம்.
  • போட்டியின்போது ஒரு பீல்டர் காயம் அல்லது நோய்வாய்ப்பட்டதாக நடுவர்கள் தெரிந்து கொண்டால், காயம்பட்ட வீரருக்குப் பதிலாக மாற்று பீல்டர் களமிறங்க அனுமதிக்கப்படுவார்.
  • மாற்று வீரர் பந்துவீசவோ அல்லது கேப்டனாகச் செயல்படவோ கூடாது.
  • பேட்டிங் மற்றும் பீல்டிங் அணிகளுக்கான பெனால்டி நேரம், ஒரு மாற்று வீரர் உள்ளே வரும்வரை பொருந்தும்.

Also, Read விராட் கோலி வாழ்க்கை வரலாறு

இம்பாக்ட் பிளேயர் எப்போது வெளிநாட்டு வீரராக இருக்க முடியாது?

ஒரு அணி தனது தொடக்கதில் 11 ல் நான்கு வெளிநாட்டு வீரர்களைப் பெயரிட்டால், அவர்கள் ஒரு இந்தியரை மட்டுமே இம்பாக்ட் வீரராகக் கொண்டு வர முடியும். இது ஒரு ஆட்டத்திற்கு நான்கு வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை என்ற கட்டுப்படுத்துவதாகும், ஐபிஎல் அதன் தொடக்கத்திலிருந்து கடைபிடித்து வரும் ஒன்று.

எவ்வாறாயினும், ஒரு அணியானது மூன்று அல்லது அதற்குக் குறைவான வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே தங்கள் 11 ல் தொடங்கினால், அவர்கள் ஒரு வெளிநாட்டு வீரரை இம்பாக்ட் வீரராகக் கொண்டு வரலாம். ஆனால் அவர்கள் டாஸில் நான்கு மாற்று வீரர்களின் ஒரு பகுதியாக வெளிநாட்டு வீரரைப் பரிந்துரைக்க வேண்டியிருக்கும்.

எடுத்துக்காட்டு

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே பொல்லார்ட், சாம்ஸ், மில்ஸ் மற்றும் டைம் டேவிட் இருந்தால், அவர்களால் ரிலே மெரிடித்தை “இம்பாக்ட் பிளேயராக” கொண்டு வர முடியாது. அது வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கையை 5 ஆகக் கொண்டு செல்லும். ஆனால், பொல்லார்ட், சாம்ஸ், மில்ஸ் ஆகிய 11 பேரில் 3 வீரர்களை மட்டுமே வெளிநாட்டு வீரர்களாக மும்பை இந்தியன்ஸ் களமிறங்கினால், வெளிநாட்டு வீரர்கள் 3 பேர் மட்டுமே அந்த நேரத்தில் ஆடுகளத்தில் இருப்பார்கள் என்பதால், டிம் டேவிட்டை எப்போது வேண்டுமானாலும் அணியில் இம்பாக்ட் பிளேயராகச் சேர்க்கலாம்.

ஐபிஎல் போட்டியில் பேட் செய்யக்கூடிய வீரர்களின் எண்ணிக்கையை மாற்றுமா?

இல்லை என்றே சொல்லலாம். 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். எனவே, பேட்டிங் டீமின் இம்பாக்ட் ப்ளேயர் ஆட்டமிழந்த/ஓய்வு பெற்ற பேட்டராக இருந்தால், இன்னும் வராத வீரர்களில் ஒருவர் வந்து விளையாடத் தொடங்குவார்.

பந்துவீச்சு அணிக்கு இது எப்படி வேலை செய்கிறது?

பந்துவீச்சுக் குழு அவர்களின் தாக்க வீரரைக் கொண்டு வரும்போது, அவர்கள் மாற்றும் வீரர் எத்தனை ஓவர்கள் வீசினாலும், அவர்கள் நான்கு ஓவர்கள் முழு ஒதுக்கீட்டை வீச அனுமதிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு அணிக்கு ஒரு பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் இருந்தால், இன்னிங்ஸின் தொடக்கத்தில் அவர்களைப் பந்துவீசச் செய்ய முடியும்.

கோட்பாட்டில், அவர்கள் பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட்டை டெத்-ஓவர் நிபுணரைக் கொண்டு மாற்றலாம், அவர்களின் இம்பாக்ட் வீரர் இன்னும் நான்கு ஓவர்கள் வீச முடியும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், ஒரு ஓவரின் நடுப்பகுதியில் பந்துவீச்சு குழு அவர்களின் இம்பாக்ட் பிளேயரைக் கொண்டுவந்தால், அவர்கள் பந்து வீச அனுமதிக்கப்படுவதற்கு முன்பு மற்ற வீரர் ஓவர் முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

தாமதமான தொடக்கமானது இம்பாக்ட் பிளேயர் விதியைப் பாதிக்குமா?

தாமதமான தொடக்கமானது இம்பாக்ட் பிளேயர் விதியைப் பாதிக்குமா
தாமதமான தொடக்கமானது இம்பாக்ட் பிளேயர் விதியைப் பாதிக்குமா

தாமதமான தொடக்கமானது போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு இன்னிங்சுக்கு 20 ஓவர்களுக்கும் குறைவாக இரு தரப்புக்கும் கிடைக்கும் மொத்த ஓவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பட்சத்தில், இம்பாக்ட் பிளேயர் விதியை அமல்படுத்துவதில் மாற்றம் இருக்கும் என்று ஐபிஎல் கூறியது. போட்டியின்போது 14 ஓவர்களுக்குள் இம்பாக்ட் பிளேயர் பயன்படுத்த வேண்டும்.

Also, Read ஐசிசி டி20 சிறந்த கிரிக்கெட் வீரர்கள்

இறுதியுரை

எந்த அணிக்கு இது வரமாகவும் எந்த அணிக்கு இது சாபமாகவும் இருக்க போகிறது என்று தெரியவில்லை. ஐபிஎல் போட்டியில் எந்த அணி இந்த இம்பாக்ட் பிளேயர் விதியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்கள் அணியின் விதியை மாற்றப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published.