பேஸ்புக் என்பது பொழுதுபோக்கு சமூக ஊடகம் மற்றும் facebook business page உங்கள் தொழிலை விளம்பரப்படுத்தவும், உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் சிறந்த தளமாக இருக்கிறது.
How To Create Facebook business page in Tamil
பேஸ்புக் நம்மில் பலரும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு தளமாகும். இதில் அக்கவுண்ட் இல்லை என்றால் அது நம்ப முடியாத விஷயம் ஆகிவிட்டது. நம்மில் பலர் ஒன்றுக்கு இரண்டு மூன்று அக்கவுண்ட் வைத்துள்ளோம் என்று சொல்வது கூட உண்மையானதே. என்னதான் இன்ஸ்டாகிராம், டிக்டாக, ஸ்னாப்சாட் போன்ற பொழுதுபோக்கு தளங்கள் வந்தாலும் எப்போதும் பேஸ்புக்கிற்கு தனிச்சிறப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.
நமது ஸ்கூல் மற்றும் காலேஜ் நண்பர்களைக் கண்டுபிடிக்க அவர்களுடன் தொடர்பில் இருக்க இது ஒரு சிறந்த வழியாகும். இன்னும் உலக அளவில் நம் தொடர்பை வளர்த்துக் கொள்ளவும் இது உதவுகிறது. அந்த நண்பர்களின் உதவியோடு வாழ்க்கையில் முன்னேறவும் சிறந்த வழி வகுக்கிறது. ஒரு தளத்தை எப்படி பயன்படுத்துகிறோமோ அதைப் பொறுத்தே அதன் தன்மை இருக்கும்.
நாம் சரியான வழியில் பயன்படுத்தினால் அது நமக்கு நன்மையாக முடியும். எந்த ஒரு பொழுதுபோக்கு தளத்தைப் பயன்படுத்தினாலும் நாம் நம் நிலையிலிருந்து தடுமாறாமல் இருக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் பேஸ்புக் நமக்குத் தரக்கூடிய நன்மையைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.
பேஸ்புக்
பேஸ்புக் உருவான கதை சற்று வியப்பாகத்தான் உள்ளது. இது முதலில் காலேஜ் நண்பர்களுடன் உரையாட தொடங்கப்பட்டது. பின்பு இது உலகெங்கும் தன் சேவையைத் தொடங்கியது. பேஸ்புக் என்பது ஒரு சமூக பொழுதுபோக்கு சேவையாகும். இது முதலில் பிப்ரவரி 4, 2004 ல் TheFacebook என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரின் கல்லூரி அறை தோழர்கள் மற்றும் சக ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களால் நிறுவப்பட்டது.
இணையத்தளத்தின் தொடக்கத்தில் ஹார்வர்ட் மாணவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது, ஆனால் குறுகிய காலத்தில் பாஸ்டன் பகுதியில் உள்ள மற்ற கல்லூரிகள், ஐவி லீக் மற்றும் படிப்படியாக அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், பெருநிறுவனங்கள் மற்றும் செப்டம்பர் 2006 க்குள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. ஒருவர் 13 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி இருந்தால் தங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கலாம்.
மார்க் ஜுக்கர்பெர்க் 2003 ஆம் ஆண்டு ஃபேஸ்மாஷ் இணையதளத்தை முதன் முதலில் உருவாக்கினார். இந்த இணையதளத்தில் மாணவர்கள் இரண்டு நபர்களின் படத்தைப் பதிவேற்றி, யார் அழகாக இருக்கிறார்கள் என்று வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்பார்கள். பின்னர் காலேஜ் விதிகளை மீறியதாகக் கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அக்டோபர் 25, 2010 அன்று, தொழில் முனைவோரும் வங்கியாளருமான ராகுல் ஜெயின், FaceMash.com யை $30,201 க்கு ஏலம் எடுத்தார்.
அதன் பிறகு தான் மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தை வடிவமைத்தார். ஆகஸ்ட் 2005 இல் facebook.com என்ற பெயரை $200,000க்கு வாங்கிய பிறகு அந்த நிறுவனம் அதன் பெயரிலிருந்து ‘The’ ஐ கைவிட்டது. டிசம்பர் 2005 இல், பேஸ்புக் 6 மில்லியன் பயனர்கள் கொண்டிருந்தது. அடுத்த ஆண்டு, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தத் தளம் கிடைத்தது, 2006 இல், இது பொதுமக்களுக்கு அணுக கூடியதாக மாறியது. பேஸ்புக் பின்னர் Apple Inc. மற்றும் Microsoft உட்பட பல நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உறுப்பினர் தகுதியை விரிவுபடுத்தியது. 2012 ஆம் ஆண்டில், பேஸ்புக் ஆப் சென்டர் என்ற ஆன்லைன் மொபைல் ஸ்டோர் தொடங்கப்பட்டது.
Facebook page tamil
பேஸ்புக் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் தனது அடுத்த பரிமாணத்தை அடைந்து உள்ளது. முதலில் பேஸ்புக் சாட்டிங் செய்ய, போட்டோஸ் பதிவு ஏற்ற, நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பகிர, நண்பர்களைத் தேட இது போன்ற செயல்களுக்குப் பயன்பட்டது பின்பு இது டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் மிகவும் பயனுள்ளதாக மாறியது. கொரோனா காலகட்டம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாம் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடந்து முடிந்தது.
கொரோனா காலகட்டம் சிறுதொழில் பயன்பாட்டாளர்களை பெரிதும் பாதித்தது. அச்சமயத்தில் உதவியது தான் பேஸ்புக் பேஜ். இது அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. தொழில் முனைவோர் பலர் அதில் கணக்கு உருவாக்கித் தங்கள் தொழிலை மீண்டும் வளர்த்தார்கள். அவர்களின் தொழில் உலக அளவில் சென்று அடைந்தது. முதலில் நன்கு அறியப்பட்ட வணிகம் மட்டுமே பேஸ்புக்கில் பிசினஸ் பேஜ் உருவாக்கிப் பயன்படுத்தியது. பின்பு இது ஒரு சிறந்த வழியாக அனைவராலும் தேர்ந்து எடுக்கப்பட்டு பயன்பட்டு வருகிறது.
How to create a Facebook Account in tamil?
முதலில் Facebook business page தொடங்க நாம் Facebook Account வைத்து இருக்க வேண்டும். பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்குவது மிகவும் எளிமையான ஒன்று. இதை நீங்கள் உங்கள் மொபைல் போன் அல்லது லேப்டாப் மூலம் பதிவு செய்யலாம்.
உங்கள் அக்கவுண்ட் தொடங்க நீங்கள் எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டாம். இது முற்றிலும் இலவசமானது. உங்கள் அக்கவுண்ட் பதிவு செய்ய உங்களுக்கு மொபைல் எண் அல்லது இமெயில் அட்ரஸ் வேண்டும். இதன் உதவியோடு தான் உங்களால் அக்கவுண்ட் தொடங்க முடியும்.
முதலில் உங்கள் மொபைல் போனில் இருக்கும் பேஸ்புக் ஆப் க்கு செல்ல வேண்டும். அங்கு நீங்கள் உள்நுழைவு மற்றும் பதிவு பெறுதல் என இரண்டு ஆப்சன் காணலாம். இப்போது நீங்கள் பதிவு பெறுதல் ஆப்ஷனை கிளிக் செய்து கீழேக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
- பதிவு ஆப்ஷனை கிளிக் செய்தபிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கப்படும். அதில் தான் நீங்கள் உங்கள் விவரங்களைப் பதிவிட வேண்டும்.
- முதலில், நீங்கள் உங்கள் பெயரைப் பதிவிட வேண்டும். அந்தப் பக்கத்தில் உங்கள் பெயரை நிரப்புவதற்கான இடத்தை நீங்கள் காணலாம். அங்கு உங்கள் பெயர் என்ன என்று கேட்கப்பட்டு இருக்கும் அதற்குக் கீழே உங்கள் பெயரைப் பதிவு செய்யவும். இப்போது நீங்கள் கொடுத்த பெயர் தான் அனைவருக்கும் தெரியும் மற்றும் உங்கள் நண்பர்கள் இந்தப் பெயரின் உதவியுடன் தான் உங்களை அடையாளம் காண்பார்கள்.
- எனவே அது துணை பெயர்கள், புனைப்பெயர்கள் போன்று இல்லாமல் உங்கள் உண்மையான முழு பெயராக இருக்க வேண்டும். இது மிக முக்கியமான விஷயம். அடுத்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும்.
- இப்போது நீங்கள் உங்கள் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். ஒரு பேஸ்புக் கணக்கை உருவாக்க, ஒரு நபர் 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டும், பிறகு தான் நீங்கள் பேஸ்புக்கில் நுழைய முடியும். நீங்கள் 13 வயதுக்கு உள்ளாக இருந்தால், உங்களால் கணக்கை உருவாக்க முடியாது. நீங்கள் பிறந்த தேதியை நிரப்பி அடுத்தது என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்த பகுதியில், உங்கள் பாலினத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆண், பெண் அல்லது திருநங்கை என்று மூன்று ஆப்ஷன் இருக்கும். உங்கள் பாலினத்தைத் தேர்வு செய்ய நீங்கள் தயங்க தேவையில்லை. அது உங்கள் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.
- இதற்குப் பிறகு, உங்கள் தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடியை பதிவு செய்ய வேண்டும். இவை இல்லாமல், உங்களால் கணக்கை உருவாக்க முடியாது, மேலும் உங்கள் தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடி ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
- அதே நேரத்தில், முந்தைய கணக்கை உருவாக்க நீங்கள் பயன்படுத்திய அதே மொபைல் எண் அல்லது இமெயில் ஐடியைப் பயன்படுத்த முடியாது. ஒரு கணக்கை உருவாக்க உங்களுக்குப் புதிய தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடி தேவை.
- (மேலே கூறப்பட்டுள்ள நான்கு பதிவுகளும் மிக முக்கியமானவை. அதில் நீங்கள் எந்த ஒரு ஆப்சனையும் வேண்டாம் என்று ஸ்கிப் செய்து அடுத்த பக்கத்துக்கு வர முடியாது.)
- நீங்கள் இப்போது பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். பாஸ்வேர்ட் தனிப்பட்டதாக இருக்க வேண்டும் மற்றும் அது உங்கள் பெயராக இருக்க கூடாது. அது உங்கள் பெயராக இருந்தால், மற்றவர்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் மற்றும் கணக்கைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- எனவே பாஸ்வர்டை உள்ளிடும்போது கவனமாக இருக்க வேண்டும். பாஸ்வேர்ட் குறைந்தபட்சம் 6 எழுத்துகள் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் அது வலுவான பாஸ்வேர்டு எனக் கருதப்படும். பாஸ்வேர்ட் குறியீடுகள், எண்கள் மற்றும் எழுத்துக்களைக் கொண்டு இருக்க வேண்டும்.
- பாஸ்வேர்டை உருவாக்கியபிறகு, உங்கள் கணக்கை உருவாக்கப் பதிவு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். சில நொடிகளில் உங்கள் பேஸ்புக் கணக்கு உருவாக்கப்படும்.
- அடுத்த கட்டத்தில், உங்கள் மொபைல் எண் அல்லது இமெயில் ஐடிக்கு OTP அனுப்பப்படும். கணக்கை உருவாக்கும்போது நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதற்கு OTP அனுப்பப்படும். இப்போது நீங்கள் OTP ஐ கொடுக்கப்பட்ட இடத்தில் நிரப்ப வேண்டும். நீங்கள் OTP எதுவும் பெறவில்லை என்றால், நீங்கள் மீண்டும் ஒரு OTP ஐக் கோரலாம்.
- இப்போது உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, நீங்கள் இப்போது அதைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது.
Facebook business page என்றால் என்ன?
Facebook business page என்பது பிராண்டுகள், நிறுவனங்கள், கலைஞர்கள் மற்றும் பொது நபர்களால் பயன்படுத்தக்கூடிய ஒரு பொது பேஸ்புக் கணக்கு. தொழில் தொடர்புத் தகவலைப் பகிரவும், புதுப்பிப்புகளை பதிவிடவும், உள்ளடக்கத்தைப் பகிரவும், நிகழ்வுகள் மற்றும் வெளியீடுகளை விளம்பரப்படுத்தவும், மற்றும் மிக முக்கியமாகத் தங்கள் பேஸ்புக் பார்வையாளர்களுடன் இணைக்கவும் பயன்படுத்துகின்றன.
பேஸ்புக் பக்கத்தைப் பேஸ்புக் விளம்பர கணக்குகள் மற்றும் பேஸ்புக் ஷாப்கள் உடன் இணைக்க முடியும். பேஸ்புக் business page வைத்திருப்பது, ஆன்லைனில் உங்கள் பிராண்ட் கண்டறிந்து தொடர்பு கொள்வதை மக்களுக்கு எளிதாக்குகிறது.
நாம் எதற்காக பேஸ்புக் business page உருவாக்க வேண்டும்?
பேஸ்புக் கணக்கு தொடங்குவது போலவே இதுவும் சுலபமான ஒன்று. நீங்கள் உங்கள் தொழிலைத் தொடங்க விரும்புகிறீர்களா அல்லது உலக அளவில் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா, எதுவாக இருந்தாலும் சரி அதற்குப் பேஸ்புக் தான் சிறந்த இடமாகும்.
இப்போது ஒவ்வொரு நபரும் ஏதாவது ஒரு புதிய தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர், அது அனைவரிடத்திலும் ட்ரெண்ட் ஆகிவிட்டது. தொழிலாளியிலிருந்து உரிமையாளராக ஆகும் கலாச்சாரம் வந்துவிட்டது.
எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்று சொல்வார்கள் அதே போல வேலைன்னு வந்துட்டா அது சொந்த தொழிலாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலரிடத்தில் மேலோங்கி இருக்கிறது. ஒரு தொழிலைத் தொடங்குவது ஒரு விஷயம் அல்ல, ஆனால் அதைச் சரியான பாதையில் எடுத்துச் செல்வது தான் இங்கே முக்கியமானது.
எல்லோரும் ஒரு தொழிலைத் தொடங்குவதை நீங்கள் பார்க்க முடியும், ஆனால் அவர்களில் எத்தனை பேர் தங்கள் தொழிலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? எல்லாரும் இல்லை, சிலர் மட்டுமே வெற்றி பெறுவார்கள், மற்றவர்கள் ஏமாற்றம் adainthu தங்கள் வழக்கமான வாழ்க்கைக்கு செல்வார்கள்.
நஷ்டத்திற்காகக் கனவை மறப்பது நியாயமில்லை என்று நான் நினைக்கிறேன். தொழில் நஷ்டத்திற்கு காரணம் அதைச் சரியான பாதையில் எடுத்துச் செல்லாததே ஆகும். அதை எப்படி மேன்மை படுத்த வேண்டும் என்று தான் பார்க்க வேண்டும், அதைக் கை விட்டுவிட கூடாது.
உங்கள் தொழிலை மேம்படுத்தச் சில புதுமையான யோசனைகள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அது நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங்கிற்கு, Facebook page உருவாக்குவது சிறந்த தேர்வாக இருக்கும். சுவரொட்டி, நோட்டீஸ் விநியோகம் போன்ற உத்திகளைக் கையாளும் பழைய காலத்தில் நாம் இல்லை.
இப்போது எல்லாம் இணையத்தின் கீழ் உள்ளது, எனவே நாம் அந்த இணைய சகாப்தத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப செல்ல வேண்டும். இது மற்ற பழைய நுட்பங்களைவிட சிறப்பாகச் செயல்படும். உங்கள் அன்றாட வாழ்க்கையில், நீங்கள் நிறைய Facebook business page பார்க்கலாம்.
அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான தயாரிப்புகளை விளம்பரம் படுத்துகிறார்கள், மேலும் நம்மில் பலர் கூட அவர்களின் தொழில் ஒரு பகுதியாக இருக்கலாம். குறுகிய காலத்தில் வணிகத்தை மேம்படுத்த இது எளிதான மற்றும் திறமையான வழியாகும்.
தற்போது நீங்கள் பேஸ்புக் பக்கத்தில் எதை வேணாலும் வாங்கலாம் மேலும் நீங்கள் பல்வேறு டீலர்களையும் காணலாம். எனவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, நீங்கள் அவர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் உங்கள் தொழிலை வளர்த்துக் கொள்ளலாம்.
பேஸ்புக் பிசினஸ் பேஜ் நமது தனிப்பட்ட தகவல்களைப் பகிருமா?
உங்கள் Facebook business page பதிவு செய்வதற்கு முன், உங்கள் தனிப்பட்ட பேஸ்புக் கணக்கில் உள்நுழைய வேண்டும். கவலைப்பட வேண்டாம் உங்கள் தனிப்பட்ட கணக்கின் தகவல்கள் உங்கள் வணிகப் பக்கத்தில் பொதுவில் காணப்படாது.
ஒவ்வொரு பிசினஸ் பக்கமும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பக்க நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படுவதே இதற்குக் காரணம். நிர்வாகிகள் தனிப்பட்ட பேஸ்புக் கணக்குகளைக் கொண்டவர்கள். உங்களின் புதிய பிசினஸ் பேஜ் யில் உங்களை அனுமதிக்கும் சாவியை போல உங்கள் தனிப்பட்ட கணக்கு செயல்படுகிறது. உங்கள் பக்கத்தில் குழு உறுப்பினர்கள் உங்களுக்கு உதவினால், அவர்களின் தனிப்பட்ட கணக்குகள் அவர்களின் குறிப்பிட்ட பாத்திரங்கள் திறன்களை மட்டுமே திறக்கும்.
How to create a Facebook page in Tamil?
பகுதி 1: பதிவுபெறுதல்
- எனவே, நீங்கள் ஏற்கனவே உங்கள் தனிப்பட்ட கணக்கில் உள்நுழையவில்லை என்றால், இப்போது உள்நுழைந்து, பக்கத்தை உருவாக்கு பகுதிக்குள் நுழையவும்.
- facebook.com/pages/create க்குச் செல்லவும்.
- இடது புறத்தில் உள்ள பேனலில் உங்கள் வணிகத் தகவல் பதிவு செய்யவும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, பக்க முன்னோட்டம் வலது புறத்தில் சில வினாடிகளில் புதுப்பிக்கப்படும்.

- உங்கள் பக்கத்தின் பெயருக்கு, உங்கள் வணிகப் பெயர் பயன்படுத்தவும் அல்லது உங்கள் வணிகத்தைக் கண்டறிய முயற்சிக்கும்போது மக்கள் தேடக்கூடிய பெயரைப் பயன்படுத்தவும்.
- உங்கள் தொழிலை விவரிக்கும் ஒரு அல்லது இரண்டு வார்த்தை பதிவு செய்யவும், பேஸ்புக் சில விருப்பங்களைப் பரிந்துரைக்கும். மூன்று பரிந்துரைகளை நீங்கள் தேர்வுச் செய்யலாம்

- அடுத்து, உங்கள் தொழிலின் விளக்கம் நிரப்ப வேண்டும். இது தேடல் முடிவுகளில் தோன்றும் சிறிய விளக்கமாகும். இது இரண்டு வாக்கியங்களாக இருக்க வேண்டும் (அதிகபட்சம் 255 எழுத்துகள்).

பகுதி 2. படங்களை பதிவிறக்கவும்
- அடுத்து, உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு சுய விவரத்தையும் அட்டைப் படங்களையும் பதிவேற்ற வேண்டும். ஒரு நல்ல புகைப்படத்தைப் பதிவிடுவது மிக முக்கியம், எனவே இங்கே புத்திசாலித்தனமாகத் தேர்வு செய்யவும்.
- நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்கள் பிராண்டுடன் ஒத்துப்போவதையும் உங்கள் தொழிலை எளிதாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- முதலில் உங்கள் சுயவிவரப் புகைப் படத்தைப் பதிவேற்றுவீர்கள். தேடல் முடிவுகளிலும் பயனர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் போதும் இந்தப் படம் உங்கள் வணிகப் பெயருடன் இருக்கும். இது உங்கள் பேஸ்புக் பக்கத்தின் மேல் இடது புறத்தில் தோன்றும்.
- உங்களிடம் அடையாளம் காணக்கூடிய பிராண்ட் இருந்தால், உங்கள் லோகோவைப் பயன்படுத்துவது பாதுகாப்பான வழி. நீங்கள் ஒரு பிரபலமாகவோ அல்லது பொது நபராகவோ இருந்தால், உங்கள் முகத்தின் படம் ஒரு வசீகரமாக வேலை செய்யும்.
- நீங்கள் உள்ளூர் வணிகமாக இருந்தால், உங்கள் கையொப்பம் வழங்கும் படத்தை நன்கு படமாக்க முயற்சிக்கவும். முக்கியமான விஷயம் என்னவென்றால், பின்தொடர்பவர் அல்லது வாடிக்கையாளருக்கு உங்கள் பக்கத்தை உடனடியாக அடையாளம் காண உதவும்.
- உங்கள் சுயவிவரப் படம் 170×170 பிக்சல்கள் இருக்க வேண்டும். இது ஒரு வட்டமாகச் செதுக்கப்படும், எனவே எந்த முக்கிய விவரங்களையும் மூலைகளில் வைக்க வேண்டாம்.
- இப்போது உங்கள் பேஸ்புக் அட்டைப் படத்தைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டது, உங்கள் பக்கத்தில் உள்ள மிக முக்கியமான படமாகும்.
- இந்தப் படம் உங்கள் வணிகத்தின் சிறப்பு அம்சத்தைப் படம்பிடித்து, உங்கள் தொழில் அல்லது பிராண்ட் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். 1640 x 856 பிக்சல்கள் கொண்ட படத்தைத் தேர்வு செய்யுமாறு Facebook பரிந்துரைக்கிறது.
- பொருத்தமான படத்தைத் தேர்ந்தெடுத்து, அட்டைப் படத்தைச் பதிவு செய்யவும்.

- நீங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றிய பிறகு, டெஸ்க்டாப் மற்றும் மொபைல் காட்சிகளுக்கு இடையில் மாறுவதற்கு, முன்னோட்டத்தின் மேல் வலது புறத்தில் உள்ள ஆப்ஷன் பயன்படுத்தலாம்.
- இரண்டு காட்சிகளிலும் உங்கள் படங்கள் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள இவற்றைப் பயன்படுத்தலாம்.

- உங்கள் தேர்வுகளில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- தா-டா! உங்களிடம் பேஸ்புக் business page உள்ளது, இருப்பினும் இதில் இன்னும் சிலவற்றை நாம் சேர்க்க வேண்டும்.
- நிச்சயமாக, உங்கள் தொழிலுக்கான பேஸ்புக் பேஜ் பார்வையாளர்களுடன் பகிர்வதற்கு முன் நீங்கள் இன்னும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது.
பகுதி 3. உங்கள் வணிகத்தை WhatsApp உடன் இணைக்கவும் (விரும்பினால்)
- சேமி என்பதைக் கிளிக் செய்தபிறகு, உங்கள் தொழிலை WhatsApp உடன் இணைக்க விரும்புகிறீர்களா என்று கேட்கும் பாப்-அப் காண்பீர்கள்.
- இது விருப்பமானது, ஆனால் இது உங்கள் பக்கத்தில் வாட்ஸ்அப் ஆப்ஷன் சேர்த்த பின்பு பேஸ்புக் விளம்பரங்களிலிருந்து WhatsApp க்கு அனுப்ப உங்களை அனுமதிக்கிறது.

- உங்கள் வணிகத்தை WhatsApp உடன் இணைக்க விரும்பினால், Send Code என்பதைக் கிளிக் செய்யவும். இல்லையெனில், வாட்ஸ்அப்பை இணைக்காமல் தொடர சாளரத்தை மூடவும்.
- நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேட்கும் மற்றொரு பாப்-அப் பெறுவீர்கள். நீங்கள் இதைத் தவிர்ப்பதால், இப்போதைக்கு, வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
பகுதி 4: உங்கள் பயனர்பெயர் உருவாக்கவும்
- உங்கள் பயனர்பெயர் என்பது பேஸ்புக்கில் உங்களை எங்குத் தேடுவது என்று மக்களுக்குச் சொல்வது.
- உங்கள் பயனர்பெயர் 50 எழுத்துக்கள்வரை இருக்கலாம், ஆனால் உங்களால் முடியும் என்பதற்காகக் கூடுதல் எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டாம். பெயர் எளிதாகவும் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உங்கள் பிசினஸ் பெயர் அல்லது அதன் சில வெளிப்படையான மாறுபாடுகள் பாதுகாப்பான ஒன்று.
- உங்கள் பயனர் பெயரை உருவாக்க, பக்க முன்னோட்டத்தில் பயனர் பெயரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் பயன்படுத்த விரும்பும் பெயரை உள்ளிடவும். அது கிடைக்குமா என்பதை Facebook உங்களுக்குத் தெரிவிக்கும். நீங்கள் பச்சை நிற சரிபார்ப்பு குறியைப் பெற்றால், நீங்கள் செல்வது நல்லது. பயனர் பெயரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

- உறுதிப்படுத்தல் பாப்-அப்பைப் பெறுவீர்கள். முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
பகுதி 5: உங்கள் பிசினஸ் விவரங்களைச் சேர்க்கவும்
- பின்னர், உங்கள் பேஸ்புக் பக்கத்தின் அறிமுகம் பிரிவில் உள்ள எல்லா களங்களையும் தொடக்கத்திலிருந்தே நிரப்புவது முக்கியம்.
- உங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு ஒரு வாடிக்கையாளர் செல்லும் முதல் இடமாகப் பேஸ்புக் இருப்பதால், அது அனைத்தையும் வைத்திருப்பது முக்கியம்.
- எடுத்துக்காட்டாக, 9 வரை திறந்திருக்கும் வணிகத்தை யாராவது தேடினால், அவர்கள் இந்தத் தகவலை உங்கள் பக்கத்தில் உறுதிப்படுத்த வேண்டும். அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், இன்னும் வரவிருக்கும் மற்றொரு இடத்தைக் கண்டுபிடிக்கும் வரை அவர்கள் நிச்சயமாகத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.
- அதிர்ஷ்டவசமாக, இதை முடிக்கப் பேஸ்புக் மிகவும் எளிதாக்குகிறது. உங்கள் பக்கக் காட்சியில், வெற்றிக்காக உங்கள் பக்கத்தை அமைக்கவும் என்ற பகுதிக்குக் கீழே செல்லவும், மேலும் தகவல் மற்றும் விருப்பங்களை வழங்குதல் என்று விரிவாக்கவும்.

- உங்கள் இணையதளத்தில் தொடங்கி பொருத்தமான விவரங்களை இங்கே நிரப்பவும்.
- குறிப்பிட்ட நேரங்களில் உங்கள் பிசினஸ் பொதுமக்களுக்குத் திறந்திருந்தால், அவற்றை இங்கே உள்ளிடுவதை உறுதிசெய்யவும். இந்தத் தகவல் தேடல் முடிவுகளில் தோன்றும்.
- பேஸ்புக்கின் உள்ளமைக்கப்பட்ட கால்-டு-ஆக்ஷன் பட்டன் , நுகர்வோருக்கு அவர்கள் தேடுவதைக் கொடுப்பதை மிகவும் எளிதாக்குகிறது மேலும் இது உங்கள் வணிகத்தில் உண்மையான நேரத்தில் ஈடுபட அனுமதிக்கிறது.
- உங்கள் வணிகத்தைப் பற்றி மேலும் அறிய, ஷாப்பிங் செய்ய, உங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும் அல்லது சந்திப்பை முன்பதிவு செய்யவும் சரியான CTA பட்டன் பார்வையாளர்களை ஊக்குவிக்கும்.
- உங்கள் CTA வை சேர்க்க, பட்டனைச் சேர் என்று சொல்லும் நீலப் பெட்டியைக் கிளிக் செய்து, எந்த வகையான பட்டனை விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- இதை அனைத்தையும் இப்போது முடிக்க விரும்பவில்லை என்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பின்னர் அணுகலாம். இடது புறத்தில் உள்ள பக்கத்தை நிர்வகி மெனுவில், பக்க தகவல் திருத்துவதற்கு கீழே செல்லவும்.
- நீங்கள் விவரங்களில் பணிபுரியும்போது எந்த நேரத்திலும் உங்கள் பேஸ்புக் வணிகப் பக்கத்தை ஆஃப்லைனில் எடுக்க விரும்பினால், உங்கள் பக்கத்தை வெளியிடுவதை தேர்வுசெய்யலாம்.
- பக்கத்தை நிர்வகி மெனுவிலிருந்து, அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பொது பக்கத் தெரிவு நிலையைக் கிளிக் செய்து, பக்கம் வெளியிடப்படாத நிலைக்கு மாற்றவும்.

- நீங்கள் தயாராக இருக்கும் போது உங்கள் பக்கத்தை மீண்டும் வெளியிட மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றவும்.
பகுதி 6. உங்கள் முதல் இடுகையை உருவாக்கவும்
- உங்கள் பிசினஸ் கான பேஸ்புக் பேஜ் விரும்புவதற்கு மக்களை அழைக்கத் தொடங்கும் முன், நீங்கள் சில மதிப்புமிக்க உள்ளடக்கத்தை இடுகையிட வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த இடுகைகளை உருவாக்கலாம் அல்லது உங்கள் தொழில் துறையில் உள்ள சிந்தனையாளர்களிடமிருந்து தொடர்புடைய உள்ளடக்கத்தைப் பகிரலாம்.
- ஒரு நிகழ்வு அல்லது சலுகை போன்ற குறிப்பிட்ட வகை இடுகைகளை நீங்கள் உருவாக்கலாம் அல்லது உங்கள் பக்கத்தின் மேலே உள்ள உருவாக்கு பெட்டியில் உள்ள விருப்பங்களில் ஒன்றை கிளிக் செய்தால் போதும்.

- உங்கள் பேஸ்புக் வணிகப் பக்கத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு நீங்கள் இடுகையிடும் மதிப்பை வழங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள், எனவே அவர்கள் உங்கள் பக்கத்தில் எப்போதும் இருக்க விரும்புவார்கள்.
பகுதி 7. பார்வையாளர்களை அழைக்கவும்
- உங்கள் பேஸ்புக் business page இப்போது வலுவான ஆன்லைன் இருப்பைக் குறிக்கிறது, இது வாடிக்கையாளர்களையும் ரசிகர்களையும் உங்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.
- இப்போது நீங்கள் சில பின்தொடர்பவர்களைப் பெற வேண்டும்!
- உங்கள் பக்கத்தை விரும்புவதற்கு ஏற்கனவே உள்ள உங்கள் பேஸ்புக் நண்பர்களை அழைப்பதன் மூலம் தொடங்கவும். அவ்வாறு செய்ய, வெற்றிக்கான உங்கள் பக்கத்தை அமைக்கவும் கீழே சென்று, உங்கள் பக்கத்தை அறிமுகம் என்ற பகுதியை விரிவாக்கவும்.

- உங்கள் தனிப்பட்ட பேஸ்புக் நண்பர்களின் பட்டியலைக் கொண்டு வர, நீல நிற இன்வைட் அழைக்கவும். நீங்கள் அழைக்க விரும்பும் நண்பர்களைத் தேர்ந்தெடுத்து, இன்வைட் என்ற பட்டனை கிளிக் செய்யவும். அது உங்கள் நண்பர்களுக்கு இன்விடேஷன் லிங்க் அனுப்பவும். அதைக் கொண்டு அவர்கள் உங்களைப் பின் தொடர்வார்.
- உங்கள் புதிய பக்கத்தை விளம்பரப்படுத்த, உங்கள் இணையதளம் மற்றும் ட்விட்டர் போன்ற உங்கள் பிற பொழுதுபோக்கு சேவைகளையும் பயன்படுத்தவும். உங்கள் விளம்பர பொருட்கள் மற்றும் இமெயில் கையொப்பத்தில் “எங்களைப் பின்தொடரவும்” லோகோவை சேர்க்கவும். நீங்கள் அவ்வாறு செய்ய வசதியாக இருந்தால், பேஸ்புக்கில் உங்களை மதிப்பாய்வு செய்யும்படி உங்கள் வாடிக்கையாளர்களைக் கேட்கலாம்.
இறுதியுரை
மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு நீங்களும் உங்கள் தொழிலுக்கான பேஸ்புக் business page உருவாக்குங்கள். இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு ஊன்றுகோலாக அமையட்டும்.
Leave a Reply