ஆன்லைன் சூதாட்டம்- தமிழர்களின் கருத்து

ஆன்லைன் சூதாட்டம் தமிழர்களின் கருத்து

ஆன்லைன் சூதாட்டம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். சூதாட்டத்தைப் பற்றித் தெரியாதவர்கள் உண்டு என்றால் அது ஆச்சரியமானதே. ஆன்லைன் சூதாட்டம் என்பது பரவலாக விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு ஆகும். மாணவர்கள் முதல் வயதானவர்கள்வரை விரும்பி விளையாடக்கூடிய விளையாட்டு என்றால் அது ஆன்லைன் சூதாட்டம்.

சூதாட்டத்தைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் மக்களிடத்தில் உள்ளது. சிலருக்கு இது நன்மையாகத் தெரிகிறது சிலருக்கு இது தீமையாகத் தெரிகிறது. எந்த ஒரு விளையாட்டு எடுத்தாலும் அதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எப்படியொரு விளையாட்டைப் விளையாடுகிறமோ அதைப் பொறுத்தே அந்த விளையாட்டு நமக்கு நன்மையானதா தீமையானதா என்று கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

ஆன்லைன் சூதாட்டமும் அப்படியே. நமக்குத் தேவையான நன்மையை அதிலிருந்து எடுத்துக் கொண்டு தீமையை விட்டு விலகினால் அதுவும் ஒரு சிறந்த விளையாட்டு ஆகும்.

 

தமிழர்களின் மரபில் ஒட்டிக் கொண்ட சூதாட்டம்

நாம் அனைவரும் சூதாட்டத்தைப் பற்றிப் பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருகிறோம். ஆனால் நாம் ஒன்றை மறந்து விட்டோம். சூதாட்டம் என்பது இப்பொழுது விளையாடக்கூடிய ஒன்று இல்லை. இது ஆதிக்கலாம் தொட்டு தமிழர்கள் மரபில் ஒட்டிக் கொண்டு வருகிறது.

நாம் பண்டைய கலாம் நூல்களை எடுத்துப் படித்தால் நமக்குத் தெரியும் சூதாட்டம் என்பது நம்மில் கலந்த ஒன்றென்று.

எடுத்துக்காட்டாக மகாபாரதத்தில் சூதாட்டத்தைப் பற்றிக் கூறப்படுகிறது. சூதாடிகளின் புலம்பல்கள் பற்றியும் அவை எப்படி விளையாடப் பட்டது என்றும் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில் நிகழ்ந்த சூதாட்ட நிகழ்வைப் பற்றிக் காணலாம்.

வெற்றி பெற வேண்டும் என்ற விரக்தியில், யுதிஷ்டிரன் தனது நான்கு இளைய சகோதரர்கள் ஒவ்வொருவரையும் சூதாட்டத்தில் ஈடுப்படுத்தினான். அவனுக்கு மிஞ்சியது தோல்வியே. வஞ்சகனான சகுனி, யுதிஷ்டிரனை இன்னும் எல்லாவற்றையும் இழக்கவில்லை என்று தூண்டினான்;

யுதிஷ்டிரனிடம் தன் மனைவி திரௌபதி இருந்தாள்,திரௌபதியைப் பணயம் வைத்து எல்லாவற்றையும் திரும்பப் பெற முடியும் என்று நினைத்தான். விளையாட்டால் மயக்கமடைந்த யுதிஷ்டிரன், அனைவரையும் திகிலடையச் செய்து, திரௌபதியை அடுத்த சுற்றுக்குப் பந்தயம் கட்டினான். ஆனால் அவன் நினைத்தது போல் அமையவில்லை. இறுதியில் அவர்கள் துரியோதனனுக்கு அடிமையானார்கள்.

இதில் சூதாட்டம் தவறாகச் சித்திரிக்கப்பட்டு இருந்தாலும் சகுனியின் சூழ்ச்சியாலையே யுதிஷ்டிரன் தோற்றான் என்பது நமக்குப் புரிகிறது. இல்லையென்றால் அவனே சிறந்த வீரனாகுவன். பிறரை ஏமாற்றாமல் நேர்மையாக விளையாடி இருந்தால் சூதாட்டமும் மகாபாரதத்தில் பெருமையாகவே சொல்லப்பட்டு இருக்கும்.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம் (Arthashastra) எனும் நூலில் சூதாட்ட வரி மற்றும் சூதாட்டக் கட்டுப்பாடுகள் பற்றி விரித்துரைக்கிறது. இதிலிருந்து நமக்குக் தெளிவாகக் தெரிகிறது சூதாட்டம் நம் மண்ணில் கலந்த ஒன்றென்று.

 

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இதில் நாம் பணத்தைப் பந்தயம் கட்டி விளையாடத் தொடங்குவோம். இதன் அடிப்படை நோக்கம் பந்தயமாக வைக்கப்பட்டப் பணத்தை இரு மடங்கு அல்லது அதற்கு மேல் பணமாக ஈட்டுவதே.

நாம் ஆன்லைன் சூதாட்டத்தை எப்படி பயன்படுத்திக்கின்றோமோ அதைப் பொறுத்தே அதனின் தன்மை இருக்கும். நம்மால் முடியும் என்று தீர்மானத்துடன் விளையாட ஆரம்பிக்க வேண்டும். உங்களால் முடியாவிட்டால் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஆன்லைன் சூதாட்டமும் உங்களை இறுதி வரை இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இது அனைத்தும் ஒரு தனி மனிதத் தீர்மானமாகும். எவராலும் மற்றவரின் கட்டாயத்தால் சூதாட்டத்தை விளையாட முடியாது.

ஆன்லைன் சூதாட்டம் விளையாடும்போது ஏற்படக்கூடிய வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் எப்படி வெற்றி வந்தால் சந்தோசப் படுகிறோமோ அவ்வாரே தோல்வி வந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

என்னால் மட்டுமே வெற்றி அடைய முடியும், அடைந்தே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு அர்த்தம். ஆன்லைன் சூதாட்டத்தில் எது நடந்தாலும் ஏற்க கூடிய மனநிலை வேண்டும்.

 

எப்போது ஆன்லைன் சூதாட்டம் நியமாகிறது?

சில காரணங்களால் ஆன்லைன் சூதாட்டம் மக்களிடத்தில் பெரும் ஆதரவைப் பெற்று கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் என்பது தவறான செயல் அல்ல. இதனால் வெற்றி பெற்றவர்களும் அதிகம் தோல்வி அடைந்தவர்களும் அதிகம்.

ஆனால் இதன் மோகம் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணங்களால் ஏற்கக் கூடியவை என்று சொல்லலாம்.

 • பந்தய வீரர் தான் தோல்வி அடையும்போதும் அல்லது செலவு செய்த பணம் திரும்ப வராதபோதும் சக மன நிலையில் இருந்தால் அது ஏற்புடைய ஆட்டம் ஆகும்.
 • சூதாட்டக்காரர், தன் வரம்பை அடைந்ததும் சூதாட்டத்தை நிறுத்திவிட்டால் அது நியமாகிறது.
 • சூதாட்டம் ஒருவருக்கு தன்முனைப்பாற்றல் பயன்பாடு கொடுக்கக் கூடியதாகவும், உற்சாகம் அளிக்கக் கூடியதாகவும், மற்றும் பொழுதுபோக்காகவும் இருந்தால் அதை விளையாடுவதில் எந்தத் தவறும் இல்லை.
 • ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பெரிய லாபம் அல்லது பணத்தின் மீது மோகம் ஏற்படுத்தாதவரை ஆன்லைன் சூதாட்டம் ஒரு சிறந்த தளமாகும்.
 • ஒருவருக்கு வாழ்க்கை அளிக்கும் தலமாக ஆன்லைன் சூதாட்டம் இருக்கும்போது அதைப் பயன்படுத்துவதில் நியாயம் உள்ளது.

 

ஏன் மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விரும்பி விளையாடுகிறார்கள்?

மக்கள் பலர் சூதாட்டத்தை ஏதோ ஒரு வடிவில், ஏதோ ஒரு காரணத்தை முன் வைத்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பந்தய வீரர்கள் தாங்கள் சூதாட்டத்தில் பங்கேற்பதற்கு சில காரணங்களைச் சொல்லிக் கொண்டு தான் உள்ளார்கள். அதில் சில இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 

 • இனிமையான பொழுதுபோக்குச் செயலாக இருக்கிறது.
 • ஒரு வருவாய் ஈட்டும் தொழிலாகச் சூதாட்டத்தை நினைக்கிறார்கள்.
 • சூதாட்டம் என்பது சரி தான், தனக்கு எந்தச் சிக்கலும் இல்லை என்று விளையாடுகிறார்கள்.
 • நடந்ததை மறக்க எதிர்நோக்குப் பொருளாகப் பயன்படுத்திகிறார்கள்.
 • மூளை வேதியியல் மாறுபாட்டுத் தேவைக்காக விளையாடுவதாகச் சொல்கிறார்கள்.

 

இது ஒரு பக்கம் இருக்க பல்வேறு எதிர்மறையானக் கருத்துகளும் மக்களிடத்திலிருந்து கொண்டு தான் இருக்கிறது. சிலர் சூதாட்டத்தை இந்தக் கண்ணோக்கில் பார்க்கிறார்கள்.

 

 • சூதாட்டம் ஒரு போதைப் பொருள்போல் மயக்கி மக்களை இழுக்கிறது.
 • சூதாட்டம் மக்களைத் தனக்கு அடிமையாக்குகிறது.
 • எளிய மக்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
 • வாழ்க்கையை ஒடுக்கும் அளவுக்குக் கடன் சுமை அதிகரிக்கிறது.
 • ஊழல், ஏமாற்றம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்கிறார்கள்.
 • ஒழுங்கற்ற வாழ்வு முறை மக்களிடத்தில் பெருகி வருகிறது.

 

ஆன்லைன் விளையாட்டுகள்

பெரும்பாலான ஆன்லைன் சூதாட்டங்கள் பாரம்பரிய விளையாட்டுகளைப் போலவே வழங்குகின்றன. நீங்கள் போக்கர், பிளாக் ஜாக் மற்றும் ஜிலி ஆகியவற்றை கணினி,போன்,மற்றும் டேப்லெட் உதவியுடன் விளையாடலாம். அவை எளிய ஸ்பின் விளையாட்டு முதல் சிக்கலான வீடியோவரை அனைத்தையும் உள்ளடக்கி வருகின்றன. ஆன்லைன் விளையாட்டு கற்றுக்கொள்வது சுலபம் மற்றும் ட்ரைல் கேம்ஸ் விளையாடி நாம் சிறந்த வீரர் ஆகலாம்.

நாம் எந்நேரமும் எங்கிருந்தும் விளையாடலாம் என்பதால் ஆன்லைன் விளையாட்டுகள் மக்களால் பெரிதும் வரவேற்க படுகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டில் பணம் ஈட்டுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதுபோக ஆன்லைன் சூதாட்ட வலைத்தளமானது பந்தயக்காரர்களுக்கு எண்ண முடியாத அளவு போனஸ் மற்றும் வெகுமதிகளைத் தருகிறது.

ஆன்லைன் விளையாட்டுகளின் எண்ணற்ற பயனாலையே மக்கள் இதைப் பெரிதும் விரும்பி விளையாடுகிறார்கள். மக்களிடத்தில் உள்ள ஆர்வத்தினால் நாளொன்றுக்குப் பல புதிய ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்களும் உருவெடுக்கின்றன. ஒவ்வெரு கேசினோ வலைத்தளமும் பந்தயக்காரர்களின் விருப்பத்திற்கேற்ப புதிய விளையாட்டு யுக்திகளையும் பயன்படுத்தி அவர்களைத் தங்கள் வசமே வைத்துள்ளார்கள்.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒரு பொழுதுபோக்குக்காக மட்டுமே பயன்படுத்தல் மூலம் அதன் நன்மைகள் ஏராளம்.

 

ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடும் முன் மனதில் கொள்ள வேண்டியது என்ன?

நாம் ஆன்லைன் சூதாட்டம் விளையாடத் துவங்கும் முன் சிலவற்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இது நாம் சூதாட்டத்தில் அடிமையாவதையும் பணம் இழப்பதையும் தடுக்கும். மேலும் நாம் கட்டுப்பாட்டுடன் விளையாட வழிவகுக்கும்.

 

விளையாட்டை உருவாக்கியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்:

எந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டையும் விளையாடும் முன், தெரிந்த கேம் டெவலப்பரால் உருவாக்கப்பட்ட விளையாட்டைத் தான் நீங்கள் பயன்படுத்துகிர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில ஆன்லைன் சூதாட்ட தளம் மலிசியஸ் சாப்ட்வேர் (malicious software) மூலம் உங்கள் தகவல்களைத் திருட வாய்ப்புள்ளது. எனவே யார் டெவெலப் செய்தார் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

 

குறிப்பிட்ட பட்ஜெட்டை ஒதுக்கிக் கொள்ளுங்கள்:

நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுவே. ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடுவதற்கு முன் அதற்கெனத் தனி பட்ஜெட்டை வைத்துக் கொள்ளுங்கள். இதைச் செய்வதன் மூலம் அதிக பணத்தை இழக்காமல் இருக்கலாம் மற்றும் நமக்கும் நம் கட்டுப்பாடுத் தெரியும். எடுத்து வைத்தப் பணத்திற்கு லாபம் வந்தாலும் நஷ்டம் வந்தாலும் இவ்வளவு தான் என்ற எண்ணம் நமக்கே வந்துவிடும்.

 

வலைதளத்தின் இலவச விளையாட்டைப் பயன்படுத்துங்கள்:

சூதாட்ட விளையாட்டில் கட்டண பதிப்பை விளையாடுவதற்கு முன், அதன் ட்ரைல் கேம்மை முயற்சியுங்கள். கேம் எப்படி இருக்கிறது மற்றும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள உதவும். ட்ரைல் கேம்மில் உங்கள் நேரத்தைச் செலவிட்டு ஓரிரு நாட்கள் பயிற்சி செய்யவும். விளையாட்டை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள இது உங்களுக்கு வழிவகுக்கும். பின்பு பணத்தைப் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பியுங்கள்.

 

உங்களைக் கட்டுப்படுத்த அறிந்து கொள்ளுங்கள்:

உங்களை எவ்வாறு மற்றும் எப்படி கட்டுப்படுத்துவது என்பது முக்கியம். நீங்கள் பணத்துடன் சூதாட விரும்பினால் இது உங்களுக்குத் தேவையான ஒன்று. பந்தயம் கட்டும் முன் இவ்வளவுதான் என்னால் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை நீங்கள் பதித்துக் கொண்டால், உங்களைக் கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் அதிக பணம் செலவழிப்பதைத் தவிர்க்கவும் முடியும்.

 

நிதானமாக இருக்கும்பொழுது விளையாடுங்கள்:

ஆன்லைன் சூதாட்ட கேம்களை விளையாடும்போது நீங்கள் செய்யக்கூடாத ஒன்று மதுபானங்களைக் குடித்துவிட்டு விளையாடுவது. நீங்கள் அப்படி விளையாடும்போது உங்கள் கட்டுப்பாட்டையும் மற்றும் பணத்தை இழக்க கூடும். எனவே நிதானம் இல்லை என்றால் ஆன்லைன் சூதாட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

 

ஆன்லைன் சூதாட்ட தடை

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் என்பது ஒரு பேச்சுப் பொருளாகவே உள்ளது. சிலர் அதைத் தடை செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்கிறாரகள் ஆனால் சிலரோ அதை ஆதரித்துக் குரல் எழுப்பிகிறார்கள்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் பெரும்பாலானவர்களால் விளையாடக்கூடிய ஒரு பொழுதுபோக்காகும். ஆன்லைன் சூதாட்டம் என்றால் தெரியாத நபரே இருக்க மாட்டார்கள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு சிறப்பு அம்சம் பெற்றது.

சில மாத காலங்களாகத் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசரக் காலத் தடை விதிக்க சட்டம் வடிவமைத்தது. இந்தச் சட்டமானது சட்டப்பேரவை மசோதாவில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றுவது என்று தீர்மானித்தது.

அக்டோபர் மாதம் 1-ந் தேதி அதற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றிய தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், அரசிதழிலும் வெளியிட்டது.

இந்த அவசரக் காலச் சட்டம் 6 வாரங்கள் முடிவடைந்த நிலையில் அதை நிரந்தரமாகக் கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28-ந் தேதி அனுப்பிவைக்கப்பட்டது. ஒப்புதலுக்குப் பதிலாகக் கவர்னர் தமிழக அரசிடம் 3 கேள்விகளைக் கேட்டுக் கடிதம் அனுப்பினார்.

தமிழக அரசு சார்பிலும் உடனடியாக அந்தக் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கவர்னர் இதுவரை எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க முடியும்.

 

இறுதியுரை

முன்பெல்லாம் ஓய்வு நேரங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பந்தயம் கட்டி விளையாடுவோம். அதுவே இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஆன்லைன் சூதாட்டமாக மாறி உள்ளது. இந்த வலைத்தளத்திலும் நாம் நம் நண்பர்களோடு மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து விளையாட முடியும்.

இதைப் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டு சிறிய பந்தயத் தொகையை வைத்துக் கொண்டு விளையாடுபவர்களுக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லை.

நாம் எப்பொழுது அதை மீறி அதில் அடிமை ஆகுகின்றமோ அப்பொழுது தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. நாம் நம் நிலையிலிருந்து தடுமாறாமல் விளையாடினால் எந்த ஒரு தவறும் இல்லை.

யார் என்னக் கருத்துத் தெரிவித்தாலும் சரி, ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதும் புறக்கணிப்பதும் ஒரு தனி மனிதச் சுதந்திரமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published.